தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2022 10:33 PM IST (Updated: 6 May 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே தனியர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்: 

பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அழகேசன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அழகேசன் மனமுடைந்து காணப்பட்டார்.  அதே பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு பின்புறமுள்ள புளிய மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகேசனின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story