ராணுவ வீரர் மர்மச்சாவு


ராணுவ வீரர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 6 May 2022 10:34 PM IST (Updated: 6 May 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர் மர்மமான நிலையில் இறந்தார்.

முதுகுளத்தூர், 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தூரி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 32). இவர் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் காசிம்பூர் பகுதியில் ராணுவ வீரராக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணமாகியது. குழந்தை இல்லை.இந்தநிலையில் திடீரென கடந்த 4-ந் தேதி சுந்தரமூர்த்தியின் தந்தை சந்திரனை தொடர்பு கொண்ட ராணுவ உயர் அதிகாரி ஒருவர் சுந்தரமூர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் சுந்தரமூர்த்தி எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
 காசிம்பூர் எல்லை பகுதியில் பணியாற்றிய சுந்தரமூர்த்தி எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியாமல் சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் தவித்தனர். பின்னர் சுந்தரமூர்த்தி உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா தூரி கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக ராணுவ உயர் அதிகாரி கூறியபோது, உடல்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தார். மேலும் சந்திரன் குடும்பத்தில் 7 பெண்கள். கடைசியாக பிறந்தவர் சுந்தரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரமூர்த்தி இறப்பால் தூரி கிராம பொதுமக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

Next Story