தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
சிறுமின்விசை தொட்டிைய சீரமைக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருேக சிறுமின்விசை தொட்டி உள்ளது. அது, பல மாதங்களாக பழுதடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுமின்விசை தொட்டியை சீரமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-வசந்திபாலமுருகன், கடலாடி.
கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்துப்பாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து சிமெண்டு சாலை அமைத்து தடுத்து விட்டார். இதனால் அதில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற ேவண்டும்.
-தே.தமிழ்வாணன், சாத்துப்பாளையம்.
சேதம் அடைந்த மின்கம்பம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ேபட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ேள இருக்கிற கம்பிகள் வெளிேய தெரிகிறது. அதன் வழியாக மழை நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-கருணமூர்த்தி, பாச்சல்.
ஆரணி பெரிய கடைவீதியில் பாப்பாத்தியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அதில் அதிக மின் இணைப்புகளும் உள்ளன. மின்கம்பத்தின் அடிபகுதியில் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடித்தால் மின்கம்பம் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-குேபந்திரன், ஆரணி.
சிறுவர் பூங்காைவ சீரமைப்பார்களா?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி 7-வது வார்டு ராணி பெல்நகர் பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவை சரியாக பராமரிக்காமல் முட்புதர் மண்டி கிடக்கிறது. அதில் உள்ள விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. சிறுவர், சிறுமிகள் சாலையில் விளையாடுகிறார்கள். அந்தப் பூங்காவை சீரமைத்து சிறுவர், சிறுமிகளின் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எம்.சி.விஜய்ஆனந்த், நவ்லாக்.
சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்ைபகள்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள சுடுகாடு அருகில் குப்பைகளை சாலையோரம் குவித்து வைத்து தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் ெபாதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பிணங்களை புதைக்க போதிய இடவசதி இல்லை. சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை மீட்டு சுடுகாட்டை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி தர ேவண்டும்.
-என்.சந்தோஷ், அம்பூர்.
தெரு பெயர் பலகையை பராமரிக்க வேண்டும்
வேலூர் மாநகராட்சியில் பல தெருக்களின் தொடக்கத்தில் தெரு பெயர், வார்டு எண் எழுதப்பட்ட இரும்பு பலகை வைத்துள்ளனர். ஒருசில இடங்களில் சரியாக பராமரிக்காமல் உள்ளது. பெயர் பலகைைய சீரமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-ராஜா, வேலூர்.
நகராட்சி கடை மாடியில் குப்பைகள்
ஆரணி காந்தி ரோடு மார்க்கெட் வளாகத்தில் நகராட்சி கடைகள் உள்ளன. நகராட்சி கடையின் மேல் மாடியில் பல கடைகள் காலியாக உள்ளன. இதைப் பயன்படுத்தி வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை மூட்டைகளாக கட்டி படிகளில் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றுவது இல்லை. பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்வது இல்லை. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராகவேந்திரன், ஆரணி.
நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க ேவண்டும்
தண்டராம்பட்டு தாலுகா சின்னியம்பேட்டை கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அந்த டவுன் பஸ்சை திடீெரன நிறுத்தி விட்டார்கள். தற்போது பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நிறுத்தப்பட்ட டவுன் பஸ்ைச மீண்டும் இயக்க வேண்டும்.
-கிருஷ்ணமூர்த்தி, சின்னியம்பேட்டை.
Related Tags :
Next Story