உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் ஆளுமைத் திறன் குறித்த பயிற்சி முகாம்
உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் ஆளுமைத் திறன் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் உள்ள சாரதா மகாவித்யாலயம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கற்பித்தல் சாராத பணியாளர்களுக்கு ஆளுமைத்திறன் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலாளர் யத்தீஸ்வாி பிரேம பிரியா அம்பா தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் பிரேம பிரணா மாஜி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பழனியம்மாள் அனைவரையும் வரவேற்றார். இதில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசியை பத்மாவதி, இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினாா். முடிவில் அலுவலக பணியாளர் ராகவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story