திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2022 10:48 PM IST (Updated: 6 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மூதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன். இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

 லலிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லலிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

தற்கொலை செய்து கொண்ட லலிதாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
----


Next Story