கீழக்கரையில் அபாயகர பேனர்கள் அகற்றம்
கீழக்கரையில் அபாயகர பேனர்கள் அகற்றப்பட்டன.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் மற்றும் போர்டுகள் வைப்பதினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், அபாய நிலையிலும் விளம்பர பேனர்களை வைத்து விட்டு அதனை பல மாதங் களாகியும் அகற்றாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் பேனர்கள் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் சுட்டிக் காட்டப் பட்டது. இதன் எதிரொலியாக கீழக்கரை நகராட்சி ஆணை யாளர் மற்றும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் ஆகியோர் துரித நடவடிக்கை மேற்கொண்டு கீழக் கரையில் உள்ள அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி தலைமையிலான பணியாளர்கள் அகற்றினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, அதற்கு உதவி புரிந்த காவல் துறை,பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story