தமிழ் வினாத்தாளில் அச்சுப்பிழை
தமிழ் வினாத்தாளில் அச்சுப்பிழை
போடிப்பட்டி,
எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் அச்சுப்பிழை உள்ளதாகக் கூறப்படுவதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-
மனப்பாட செய்யுள்
மனப்பாட செய்யுளுக்கான கேள்வியில் அ, ஆ என 2 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஏதாவது ஒரு கேள்வியை தேர்வு செய்து எழுதும் வகையில் 2 கேள்விகளுக்கும் நடுவில் அல்லது என்ற வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும். மாதிரி வினாத்தாள்களிலும், இதுவரை நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளிலும் இதே முறையே கடைபிடிக்கப்பட்டது.
அச்சுப்பிழை
நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தமிழ் தேர்வின்போது கேள்வி எண் 34-ல் 3 மதிப்பெண்ணுக்கான கேள்வியில் அடி பிறழாமல் எழுதுக. (அ) அன்னை மொழியே- எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்
(ஆ) நவமணி வடக்க யில்போல் எனத் தொடங்கும் தேம்பாவணிப்பாடல் என்று மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அல்லது என்ற வார்த்தை அச்சுப்பிழையால் விடுபட்டுள்ளதா அல்லது 2 கேள்விகளுக்கும் பதில் எழுத வேண்டுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஒருசில மாணவர்கள் வழக்கம் போல ஒரு பாடலை மட்டும் எழுதியுள்ளனர். சில மாணவர்கள் 2 கேள்விகளுக்குமான பாடல்களை எழுதியுள்ளனர். தற்போது எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற குழப்பம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
நேரம் கிடைக்காத நிலை
கேள்வியில் கேட்கப்பட்டுள்ளபடி 8 வரிகள் கொண்ட 2 பாடல்களையும் விடையாக எழுதியதால் மற்ற கேள்விகளுக்கு விடை எழுதுவதற்கு போதுமான நேரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது என்று மாணவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story