தேரேகால்புதூர் அருகே கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

தேரேகால்புதூர் அருகே கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 6 May 2022 11:02 PM IST (Updated: 6 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

தேரேகால்புதூர் அருகே கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

ஆரல்வாய்மொழி, 
தேரேகால்புதூர் அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வராண்டாவில் உள்ள படிக்கட்டின் பின்புறம் ஒரு மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதை பார்த்த கல்லூரி ஊழியர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழியர்கள் கல்லூரிக்கு வந்து பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 9 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு தெற்குமலை காட்டில் விடப்பட்டது.

Next Story