கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
ஆற்காடு அருகே கிணற்றில் விழுந்து முதியவர் பலியானார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 76). இவர் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து சுந்தரேசன் உடலை மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Related Tags :
Next Story