நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 11:10 PM IST (Updated: 6 May 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க கோரியும், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசு வீடு கட்டித்தர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், அசோகன், வேலுசாமி, தங்கமணி, சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் ஸ்ரேயா சிங்கை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story