நாமகிரிப்பேட்டையில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டையில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிக்கும் பழக்கம்
நாமகிரிப்பேட்டை தேவஸ்தானம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுமித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பார்த்திபன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமித்ரா வீட்டில் வைத்திருந்த பணத்தை பார்த்திபன் எடுத்து சென்று மது குடித்து செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சுமித்ரா கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனால் விரக்தி அடைந்த பார்த்திபன் வீட்டில் மனைவி இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story