12½ கிலோ கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது


12½ கிலோ கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 11:12 PM IST (Updated: 6 May 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே 12½ கிலோ கஞ்சா பதுக்கிய 2 பேரை போலீசார் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

தேனியை அடுத்த பூதிப்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக சிறப்பு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார்  பூதிப்புரத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற போது ஒரு வீட்டில் இருந்து கஞ்சாவை வெளியிடத்துக்கு 2 பேர் கடத்திச் செல்ல முயன்றனர். அவர்களை தனிப்படையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த வீட்டுக்குள் சோதனையிட்டனர். அப்போது அங்கு 12½ கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள், அதே ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அருண் (வயது 32), அவருடைய உறவினர் ஆசைக்குமார் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அருண், ஆசைக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story