குடிநீர் வினியோகம் நிறுத்தம்
மயிலாடுதுறை நகரில், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மயிலாடுதுறை, மே. 7-
மயிலாடுதுறை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் செல்லும் பிரதான குழாய்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே மயிலாடுதுறை நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story