மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
நாகை கலெக்டரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்போரை காலி செய்யும் உத்தரவை திரும்பபெற வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story