290 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள்


290 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள்
x
தினத்தந்தி 6 May 2022 11:27 PM IST (Updated: 6 May 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 290 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் வழங்கினார்.

வெளிப்பாளையம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு 290 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை  வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது லட்சியம் நிறைவேறும் வரை போராட வேண்டும். படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு  இரண்டு புத்தகங்களை படிக்க வேண்டும். செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செல்போன் நமது நினைவாற்றலை மழுங்க செய்யும். பட்டம் என்பது மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கவுரவம். அதற்கு கலங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story