வரவேற்பு இல்லத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்


வரவேற்பு இல்லத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்
x
தினத்தந்தி 6 May 2022 11:32 PM IST (Updated: 6 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வரவேற்பு இல்லத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் கடந்த 2-ந் தேதி சுமார் 5 வயது மற்றும் 3 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் தனியாக நின்று கொண்டிருந்தனர். 

இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் பஸ் நிலையத்திற்கு வந்து தனியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கத்தில் உள்ள ஆண் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் சேர்த்தனர். 

விசாரணையில் அந்த சிறுவர்கள் சந்தவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நேற்று வரவேற்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த அந்த 2 சிறுவர்களும் மாயமாகினர். 

இதையடுத்து பல இடத்தில் வரவேற்பு இல்ல அலுவலர்கள் தேடியும் கிடைக்காததால் இன்று திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story