பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை


பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 May 2022 11:32 PM IST (Updated: 6 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை


விழுப்புரம்

குண்டர் தடுப்பு சட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், நிருபர்களிடம் கூறுகையில், பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாலியல் வழக்கில் சிக்கிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஒருபோதும் சமாதான போக்கை கடைபிடிக்காது. சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போலீஸ் சூப்பிரண்டு

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில், பாலியல் தொந்தரவு பிரச்சினைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த போக்சோ வழக்கில் குறிப்பிட்ட கால விசாரணை முடிவடைந்த பின்னர்தான், குற்றவாளி கைது செய்யப்படுவார்கள். இதுசம்பந்தமாக பள்ளிகளில் மாணவிகளிடம் காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Next Story