கோவில் கும்பாபிஷேக விழா
கோவில் கும்பாபிஷேக விழா
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மயில்ராயன்கோட்டை நாடு குலப்பண்பாட்டு கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் முதல் கால பூஜை தொடங்கியது. இதைதொடர்ந்து 2-ம் கால பூஜைகளும், 3-ம் கால பூஜையும் நடைபெற்றன. இதைெதாடர்ந்து, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் மூலவர் விநாயகர், முருகன் உடன் மயில் வாகனம், பைரவர்கள் ஆகிய தெய்வகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மயில்ராயன்கோட்டை நாடு மக்கள் பண்பாட்டு அறக்கட்டளை கழகம் செய்திருந்தது.
Related Tags :
Next Story