கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
சிவகங்கை
சிவகங்கை அல்லூர் பனங்காடி சாலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 35 மாணவர்கள் தங்கினர். இந்நிலையில் இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருந்ததாம். இதுகுறித்து மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் பலமுறை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர்களுக்கு காலை உணவாக பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. இது உண்ண முடியாத அளவிற்கு முறையாக வேக வைக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் உணவுகள் வைக்கப்பட்டிருந்த சட்டியுடன் மாணவர்கள் அல்லூர் பனங்காடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story