இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது


இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 11:42 PM IST (Updated: 6 May 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரை சேர்ந்தவர் வீரய்யா(வயது 23). இவர் இனாம்அகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் கடந்த மாதம் 22-ந் தேதி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீரய்யாவை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வீரய்யாவை போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story