மேலும் ஒருவர் கைது
குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியில் பண்டேரிநாதன் தலைமையிலான குழுவினர் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை அதிபர் முருகன் என்பவரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த வழக்கில் பண்டரிநாதன் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 கார்களும், 1 புதிய மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புயை 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூண்டியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் திருவாரூர் மாவட்டம் திருப்பூண்டி பெரிய சிங்களாந்தியில் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதை தொடா்ந்து சாம்ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story