ஒலிபெருக்கி கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்- மந்திரி திலீப் வல்சே பாட்டீல் வலியுறுத்தல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 6 May 2022 11:50 PM IST (Updated: 6 May 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஒலிபெருக்கிகள் குறித்த கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் வலியுறுத்தினார்.

மும்பை, 
ஒலிபெருக்கிகள் குறித்த கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் வலியுறுத்தினார். 
ஆய்வு கூட்டம்
மராட்டியத்தில் மசூதி ஒலிபெருக்கி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 
இதில் கலந்துகொண்ட உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியதாவது:-
கொள்கை 
மத்திய அரசு நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது குறித்த கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். 
முஸ்லிம் மற்றும் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஒத்துழைப்பின் காரணமாக மசூதி ஒலிபெருக்கி பிரச்சினையை அமைதியாக கையாளவும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் முடிந்தது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story