தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
வேலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேற்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பதிவேடுகள், கோப்புகள் சரியான முறையில் வைக்கப்பட்டுள்ளதா?, பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலக பகுதி தூய்மையாக உள்ளதா? என்றும் பார்வையிட்டார்.
மேலும் அங்கு செயல்பட்டு வரும் ஆதார் மற்றும் இ-சேவை மையங்கள் எவ்வாறு செயல்படுகிறது. அங்கு மக்களுக்கு மேற்கொள்ளப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story