சிவன்-பார்வதி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்
சிவன்-பார்வதி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்
குன்னூர்
குன்னூர் மேல்கடைவீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 17-ந் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, 19-ந் தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரா காலனியின் 15-வது ஆண்டு உற்சவத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு கரோலினா மாகாளியம்மன் கோவிலில் இருந்து பூ காவடி, தேவி நிர்த்தம், துடும்பு, அம்மன் தாலாட்டு, நையாண்டி மேளம், முத்துக்காளை, மேள-தாளங்கள் மற்றும் அபிஷேக பொருட்களுடன் தீர்த்தகுடம் எடுத்து மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.
ஊர்வலத்தில் சிவன்-பார்வதி வேடமணிந்து வந்த பக்தர்கள் பரவசபடுத்தினர். பின்னர் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் சந்திரா காலனி வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 3 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக தந்தி மாரியம்மன் சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பச்ச காளி, பவள காளி, கருப்பு ஆடல்-பாடல், மங்கலவாத்தியத்துடன் சந்திரா காலனி மண்டகபடியை அடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story