உதவி பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
உதவி பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஊட்டி
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் பூர்த்தி அடையாத உதவி பேராசிரியர்களுக்கு புத்தாக்க பணியிடை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் கோவை மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 140 பேருக்கு புத்தாக்க பயிற்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று தொடங்கி இன்று வரை 2 நாட்கள் நடந்தது. தொடக்க விழாவில் விலங்கியல் துறை பேராசிரியர் எபினேசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி பேசுகையில், கல்லூரி மாணவர்களை திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டியது பேராசிரியர்களின் கடமை.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தாண்டி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்றார். இதில் உயர் கல்வி மேம்பாடு, கற்றல்- கற்பித்தலுக்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுதல், ஆராய்ச்சி மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story