எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,181 மாணவர்கள் எழுதினர்
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,181 மாணவர்கள் எழுதினர். ஆனால் 352 பேர் வரவில்லை.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 7,181 மாணவர்கள் எழுதினர். ஆனால் 352 பேர் வரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு முறையாக பொதுத்தேர்வு நடத்த முடியவில்லை. இந்த முறை கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவ-மாணவிகள் இன்று மொழிப்பாட தேர்வு எழுதினர்.
உடல் வெப்பநிலை
காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டு தேர்வறைக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
9.55 மணிக்கு 2-வது மணி அடிக்கப்பட்டவுடன், அறை கண்காணிப்பாளா் வினாத்தாள் உறைகளை மாணவா்களிடம் காண்பித்து, இரு மாணவா்களிடம் கையெழுத்து பெற்று, உறைகளை பிரித்து கேள்வித்தாள்களை மாணவர்களுக்கு வினியோகித்தனர். தொடர்ந்து விடைத்தாள் வினியோகிக்கப்பட்டு, தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
வாழ்நாள் தடை
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத 7,533 பேர் தகுதியாக இருந்த நிலையில், இன்று 7,181 பேர் மட்டுமே கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 352 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் பொதுத்தோ்வில் காப்பி அடித்தால்,
அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுத தடை விதிக்கப்படும், தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதோடு தேர்வு மையத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story