குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்


குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 7 May 2022 12:07 AM IST (Updated: 7 May 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் கோஷ்டி மோதல் காரணமாக 4 பேர் காயம் அடைந்தனர். இது சம்பந்தமாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தைச் சேர்ந்த வில்வநாதன் மகள் மீனாதேவி(வயது 24) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் மகன் விஜய்(27) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மீனாதேவி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதில் இரு குடும்பத்தாருக்கும் இடையே சம்பவத்தன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டதாகக்கூறப்படுகிறது. இதில் மீனாதேவி தரப்பில் அவரது தாய் தேன்மொழி மற்றும் பாட்டி மனோன்மணி ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் விஜய் தரப்பில் அவரது உறவினர்கள் பசுபதி(45), சுதா(39) ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மீனாதேவியின் தாய் தேன்மொழியும், விஜய் தரப்பில் அவரது சகோதரர் சசி(46) என்பவரும் தனித்தனியாக தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரை(40), சாமிதுரை(60), முருகானந்தம்(45), விஜய்(27), சுரேஷ்(30), ஆகியோர் மீதும், சசி கொடுத்த புகாரின் பேரில் வில்வநாதன்(47), விஜயபாரதி(30), மீனாதேவி(24), தேன்மொழி(35) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story