ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம் இன்று நடக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அகத்திய முனிவருக்கு, சிவபெருமான் திருமணகோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் அமைந்துள்ள மணவாளசுவாமிக்கு (சிவன்-பார்வதி) ஆண்டிற்கு ஒரு முறை கையால் அறைத்து சாத்தப்படும் சந்தனம் அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தைல அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) மணவாளசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்காலத்தில் சிவபெருமானுக்கு கையால் அறைத்த சந்தனம் பூசப்பட்டு மலர்களால் அலங்கரித்து பெருமாள் முன்னிலையில் சிவபெருமான் திருமணகோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
Related Tags :
Next Story