மாணவியை கடத்த முயன்ற தாய்மாமனுக்கு தர்மஅடி


மாணவியை கடத்த முயன்ற தாய்மாமனுக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 7 May 2022 12:22 AM IST (Updated: 7 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்த முயன்ற தாய்மாமனுக்கு தர்மஅடி விழுந்தது.

அரியலூர்
அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் கல்லூரிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது அந்த மாணவியின் தாய்மாமன் அவரை காரில் கடத்தி சென்றுள்ளார். காரில் கடத்தி செல்லும்போது கல்லூரி மாணவி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து பெருமாள் சாவடி கிராம மக்கள் காரை மடக்கி பிடித்து, அதிலிருந்து மாணவியை மீட்டு கடத்தி வந்த தாய்மாமனுக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த அரியலூர் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story