15 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வினை 15 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் எழுதினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வினை 15 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களில் 8 ஆயிரத்து 221 மாணவர்கள், 8 ஆயிரத்து 73 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 294 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், 7 ஆயிரத்து 708 மாணவர்கள், 7 ஆயிரத்து 848 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 556 பேர் தேர்வு எழுதினர்.
738 பேர் தேர்வு எழுத வரவில்லை
இதில், 738 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 70 நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் குடிநீர், தடையின்றி மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்வு மையத்திற்குள் துண்டுதாள், செல்போன் முதலியன எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
எச்சரிக்கை பலகை
விடைத்தாள்களை பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு, அனைத்து தேர்வு மைய வாசலிலும் விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு முன்னதாக மாணவ-மாணவிகள் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story