பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
வலங்கைமான் அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த கட்டிடம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த மூலாழ்வாஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. காருகுடி, சாலபோகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, மத்திய-மாநில அரசு திட்டப்பணிகள், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், வீட்டு வரி செலுத்துதல், குறைகளை தெரிவித்தல் போன்ற பணிகளுக்காக இங்கு வந்து சென்றனர்.
ஊராட்சியின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வரும் இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் தற்போது பழுதடைந்து உள்ளது.
இதன்காரணமாக ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாக சாலபோகம் கிராமத்திலுள்ள நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆகவே, பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story