பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.60 லட்சம் அபேஸ்


பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.60 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 7 May 2022 12:37 AM IST (Updated: 7 May 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

கடனுதவி தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.60 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் பகுதியை சேர்ந்த அமுதலட்சுமி என்பவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில வாரத்திற்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் கடன் தொகை ஒப்புதல் ஆகியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு ஒரு லிங்கும் அனுப்பப்பட்டிருந்தது. இதை பார்த்த அவர், அந்த லிங்கிற்குள் சென்று தனது பெயர், வங்கி விவரங்களை பதிவு செய்தார். அதன் பிறகு அமுதலட்சுமியை தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், உங்களுக்கு கடனுதவி ஒப்புதல் ஆகிவிட்டது. அந்த தொகை கிடைக்க 15 சதவீத தொகையை செலுத்தினால்தான் கடன் தொகை கிரெடிட் ஆகும் என்று கூறியுள்ளார். 

இதை நம்பிய அமுதலட்சுமி, கூகுள்பே மூலம் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 8 தவணையாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், அமுதலட்சுமிக்கு கடன் தொகையை தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story