அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள்


அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள்
x
தினத்தந்தி 7 May 2022 12:58 AM IST (Updated: 7 May 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருேக அகழாய்வில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

தாயில்பட்டி, 
சிவகாசி அருேக அகழாய்வில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. 
அகழாய்வு குழி 
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. ஐந்து அகழாய்வு குழிகள் இதுவரை தோண்டப்பட்டுள்ளன. இதில் தற்போது 12 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. 
நேற்று 6-வது புதிய அகழாய்வு குழி தோண்டப்பட்டது. இந்த அகழாய்வு குழி மையத்தில் இருப்பதால் ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக ஆண்கள் புகை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள், வீட்டில் தரையை சமப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பாறைகள் கண்ெடடுக்கப்பட்டன. 
கண்ணாடி பாசி மணி 
 சுடுமண்ணால் ஆன கிண்ணங்கள், மிகுந்த வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தீப விளக்குகள், வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கருவிகளை தயார் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், சுடுமண்ணால் ஆன காதணிகள், கண்ணாடி பாசி மணிகள், தாயக் கட்டைகள் ஆகியவை கிடைந்தன. 
 உடைந்த மண் ஓடுகள், எலும்புகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. மேலும் இன்னும் சில அடி தோண்டப்பட்டால் வீட்டின் சுவர்கள் இருந்ததற்கான அடையாளம் தெரிய வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை மறுநாள் மேலும் ஒரு அகழாய்வு குழி தோண்டுவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story