கரூர் அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றம்
சித்திரை திருவிழாவையொட்டி கரூர் அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
கரூர்,
சித்திரை திருவிழா
கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி ரெங்கநாதர் சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலில் உள்ள கொடிகம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தேரோட்டம்
இதையடுத்து, ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம், புஷ்பக வாகனம், குதிரை வாகனம், ஜெகலெட்சுமி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா தினமும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளி, காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story