மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2022 1:12 AM IST (Updated: 7 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, ஜீவானந்தம், மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பல்வகை புறம்போக்குகளில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும். வீடற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும். வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம கணக்குகளில் ஏற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Next Story