மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ஒரத்தநாடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் கனகராஜ் (வயது42). கூலித்தொழிலாளி.
இவர் கூலி வேலைக்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வயல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அருமலை எனும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராவிதமாக கனகராஜ் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கனகராஜ் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story