கோலார், சிக்பள்ளாப்பூரில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
கோலார், சிக்பள்ளாப்பூரில் ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள். குளிக்க சென்றபோது பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்: கோலார், சிக்பள்ளாப்பூரில் ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள். குளிக்க சென்றபோது பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா மஸ்கம் பி.பிளாக் பகுதியை சேர்ந்தவன் ஹரிஹரன்(வயது 15). இந்த நிலையில் ஹரிஹரன், அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளான். அப்போது ஹரிஹரன், குளத்தின் ஆழமான பகுதியில் நின்று குளித்ததாக தெரிகிறது.
இதனால் நிலைதடுமாறி குளத்தில் மூழ்கி தத்தளித்தான். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் சிறிதுநேரத்தில் குளத்தில் மூழ்கி ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மற்றொரு சம்பவத்தில்...
இதேபோல் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன்ஜி. இவரது மகன் அருண் (14). அருண், அதேபகுதியை சேர்ந்த தனது நண்பனான தனுஷ் (12) என்பவனுடன் கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றான். 2 பேரும் ஆழமான பகுதியில் நின்று குளித்துள்ளனர். அப்போது 2 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிந்தாமணி போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் குளத்தில் மூழ்கி பலியான சிறுவர்கள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆண்டர்சன்பேட்டை, சிந்தாமணி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story