திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் நாள் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 95 சதவீதமாணவ-மாணவிகள் எழுதினர்


திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் நாள் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 95 சதவீதமாணவ-மாணவிகள் எழுதினர்
x

திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் நாள் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 95 சதவீதமாணவ-மாணவிகள் எழுதினர். 1,681 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாணவ-மாணவிகள் நலன்கருதி 2 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கல்வித்துறையால் ரத்து செய்யப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு தடையின்றி நடத்தப்படும் என்ற அறிவிப்பின் பேரில் நேற்று தொடங்கியது.திருச்சி மாவட்டத்தில் 18,107 மாணவர்கள், 17 ஆயிரத்து 824 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 931 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருந்தனர். தேர்வுக்காக 165 தேர்வு மையங்கள் ஆயத்தமாக இருந்தது.
95 சதவீதம் மாணவர்கள் வருகை
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கிய முதல் நாளான நேற்று 16 ஆயிரத்து 999மாணவர்களும், 17 ஆயிரத்து 251 மாணவிகளும் தேர்வு மையங்களுக்கு வருகை தந்து தேர்வு எழுதினர். இது 95 சதவீதம்ஆகும். 1,108 மாணவர்கள், 573 மாணவிகள் என மொத்தம் 1,681 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 5 சதவீதம் ஆகும்.
மேலும் தனித்தேர்வர்களுக்கு தனியாக 5 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய சிறையில் ஒரு மையத்தில் தேர்வு நடந்தது. முன்னதாக தேர்வு நடக்கும் மையத்திற்கு காலை 8.45 மணிக்குள் மாணவ, மாணவிகளை வருகைதர ஆசிரியர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, மாணவர்களும் வந்தனர். முன்னதாக கடவுள் வணக்கம் செலுத்துதல் மற்றும் நினைத்த கடவுளை வேண்டிக்கொண்டு தேர்வு எதிர்கொள்ள தயாரானார்கள். காலை 9.45 மணிக்குள் தேர்வு நடக்கும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டு, அதில் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டது. 10.10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் அதை 5 நிமிடம் படித்து பார்க்க அனுமதிக்கப்பட்டது. சரியாக 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாட தேர்வு நடந்தது. பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.
பறக்கும் படை
தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களிலும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக 270 ஆசிரியர்கள் பறக்கும்படைஉறுப்பினர்களாகநியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு நேரடியாக திடீரென சென்று தேர்வு முறையாக நடக்கிறதா? முறைகேடு நடக்கிறதா? என ஆய்வு செய்தனர்.முதல் நாள் தேர்வில் கேள்விகள் மிக எளிதாகஇருந்ததாகவும், ஒரு மதிப்பெண் வினாக்கள் சில பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story