மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம்; வாலிபர் கைது


மலேசிய பெண்ணை ஏமாற்றி  திருமணம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 May 2022 2:42 AM IST (Updated: 7 May 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை டவுன் குற்றாலம் ரோடு சிக்கந்தர்புரத்தைச் சேர்ந்தவர் இம்ரான் (வயது 35). இவர் மலேசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், தற்போது அந்த பெண் அவரை மீண்டும் மலேசியாவுக்கு அழைத்தபோது அங்கு செல்ல மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த பெண் நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இம்ரான் மற்றும் அவருடைய தாய், தந்தை, சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று இம்ரானை போலீசார் கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, நேற்று காலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்து வழக்கறிஞர் முன்னணியினர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாரை சந்தித்து மனு ெகாடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story