அதிசய கிணறு பகுதியில் ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் ஆய்வு
திசையன்விளை அருகே அதிசய கிணறு பகுதியில் ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது. மழைக்காலத்தில் படுகையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் பல மாதங்களாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. ஆனால் கிணறு நிரம்பவில்லை. இந்த கிணற்றில் உள்வாங்கும் தண்ணீர் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. -
இதுகுறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதின்பேரில், சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமணன் தலைமையிலான குழுவினர் வந்து அதிசய கிணற்றையும், அருகில் உள்ள கிணறுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த அறிக்கையில், கிணற்று பகுதியில் நீரை சேமிக்க பூமிக்கு அடியில் அணை உருவாக்கலாம் என்று கூறி இருந்தனர்
இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிசய கிணறு மற்றும் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீரின் தன்மையை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமணன் மற்றும் பூச்சிக்காடு ஜேம்ஸ் மரைன் கல்லூரி நாட்டிக்கல் பிரிவு மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story