வைகை ஆற்றை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?-அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வைகை ஆற்றை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?-அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2022 3:15 AM IST (Updated: 7 May 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை,

வைகை ஆற்றை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வைகை ஆறு

மதுரை மேல அண்ணாத்தோப்பு பகுதியைச்சேர்ந்தவரும், வைகை நதி மக்கள் இயக்கத்தின் நிர்வாகியுமான நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகராட்சியின் முக்கிய நீர் ஆதாரமாக வைகை ஆறு உள்ளது. மதுரை மாநகரில் நிலத்தடி நீர் உயர்வதற்கு, மழை நீரும், வெள்ள நீரும் காரணமாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் வைகை ஆறு சீரழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வைகையில் ஆஸ்பத்திரி கழிவுகள், கட்டிட கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆற்றில் மாசு அதிகரித்து உள்ளது.
எனவே மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்றை பாதுகாக்கும் வைகையில், ஆற்றுக்குள் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கோரிப்பாளையம் அருகில் பந்தல்குடி கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆஜராகி, வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பது, ஆக்கிரமிப்புகளால் அதன் இயல்புநிலை மாறியுள்ளது. இதை தடுக்க உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள ்பிறப்பிக்கப்பட்டபோதும், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்று வாதாடினார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பது, ஆக்கிரமிப்புகள் குறித்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் முறையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 3-வது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
=========

Next Story