மின்சாரம் தாக்கி பெண் பலி
உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கல்லூத்து.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச்சாமி. இவருடைய மனைவி அமிர்தவள்ளி (வயது 60). இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இங்கு கணவரும்-மனைவியும் வசித்து வந்தனர். இந்த நிலையில் அமிர்தவள்ளி நேற்று தங்களது துணிகளை துவைத்து வீட்டின் மாடியில் காயப்போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது அருகே சென்ற மின்வயரிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story