புகார் பெட்டி
புகார் பெட்டிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகார் பெட்டி
பயனற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சி பஸ் நிலையம் அருகிலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளது. இதற்கென தனி பணியாளர்கள் இருந்தும் பயன்பாடற்று கிடக்கிறது. இயந்திரங்கள் உள்ளடங்கிய இந்த நிலையமானது திறந்தே கிடப்பதால் இயந்திரங்கள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. அதேசமயம் பல சமுதாய சீர்கேடுகளும் நடைபெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.
Related Tags :
Next Story