மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2022 3:44 AM IST (Updated: 7 May 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றாமல் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

Next Story