கோவில் விழாவை நடத்த அனுமதி கோரி கீழஆம்பூரில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


கோவில் விழாவை நடத்த அனுமதி கோரி கீழஆம்பூரில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2022 4:05 AM IST (Updated: 7 May 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே கோவில் விழாவை நடத்த அனுமதி கோரி கீழஆம்பூரில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையம்:
கடையம் அருகே சிவசைலத்தில் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாத சுவாமி கோவில் உள்ளது. பரமகல்யாணி அம்பாள், ஆம்பூரில் பிறந்ததாக ஐதீகம். எனவே ஆம்பூரில் ஆண்டுதோறும் வசந்த அழைப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்காக சுவாமி-அம்பாள் உற்சவர் சிலைகள் ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
ஆம்பூரில் வசந்த அழைப்பு உற்சவத்தை ஆண்டுதோறும் நீர்ப்பாசன கமிட்டி அமைப்பினர் நடத்தி வந்தனர். இந்த நிலையில் வசந்த அழைப்பு உற்சவத்தை இந்த ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகமே நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கீழ ஆம்பூரில் உள்ள விவசாய சங்க அலுவலக வளாகத்தில் நீர்ப்பாசன கமிட்டியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் திரண்டனர். அவர்களிடம், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வசந்த அழைப்பு உற்சவம் நடத்துவது தொடர்பாக, சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story