தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது


தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 7 May 2022 4:14 AM IST (Updated: 7 May 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு 79 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 10,322 மாணவர்களும், 10,009 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

இதுபற்றி மாணவர் விக்னேஷ் கூறும்போது, தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. எங்களது பள்ளி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடம் நடத்தினார்கள். இதனால் தேர்வை நன்றாக எழுதினேன். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், என்றார்.

Next Story