சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு


சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 7 May 2022 4:18 AM IST (Updated: 7 May 2022 4:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் ஒன்றிய, நகரம், பேரூராட்சிளில் 15-வது அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி, கன்னங்குறிச்சி, கருப்பூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளில் நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கனவே கட்சியினருக்கு வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 4 பேரூராட்சிகளிலும் செயலாளர், அவைத்தலைவர், துணை செயலாளர்கள், பொருளாளர், பிரதிநிதிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கன்னங்குறிச்சி, கருப்பூர் உள்பட 4 பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகவனம் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொருளாளர் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரை கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் டாக்டர் தருண், சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story