காதல் மனைவி பிரிந்து சென்றதால் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
காதல் மனைவி பிரிந்து சென்றதால் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூரமங்கலம்:
சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 26). ெமக்கானிக். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரன் வீட்டுக்கு பெண்ணின் பெற்றோர் வந்து மகளை அழைத்து சென்றுவிட்டனர். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த புவனேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story