ஆத்தூரில் பெண்ணிடம் பணம் பறிப்பு: கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை
ஆத்தூரில் பெண்ணிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்:
ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (வயது 53). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் அசீனா என்பவருடன் கடந்த 22-ந் தேதி மதியம் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவர் பையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரசாயன பொடியை தூவி விட்டு, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ெதாடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்துவதுடன், குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story