சங்ககிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து 1¾ பவுன் நகை திருட்டு
சங்ககிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து 1¾ பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே கஸ்தூரி பட்டி கிராமம் வண்ணாம்பாறை காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் சங்ககிரி ஆர்.எஸ். ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி, மகளுடன் வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ராஜா தனது மகனை கடைக்கு அழைத்து வந்துவிட்டார். பின்னர் மாலை 6.45 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்ற போது, பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story